Madurai poster

Advertisment

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே 2021 ஆம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இச்சுவரொட்டியின் கீழே காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படங்களுடன் அச்சுவரொட்டி மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.

கட்சி சார்ந்தும் சாதி அமைப்புகள் சார்ந்தும் அரசு ஊழியர்கள் இருவர் சுவரொட்டி ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.