Skip to main content

’கோமளவல்லி!’ -சர்கார் சர்ச்சைக்கு ஜெயக்குமார் விளக்கம்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
va

 

சர்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை வரலட்சுமிக்கு வைத்துள்ளதால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.  ஆனால், அது ஜெயலலிதாவின் பெயர் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.  இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

’’நடிகர்களுக்கு இப்போது பேஷன் ஆகிவிட்டது.  அம்மா(ஜெயலலிதா) இல்லாததால் ரொம்ப குளிர் விட்டு போய்விட்டது.  அதுதான் முக்கியம்.  அம்மா இருக்கும்போது இது மாதிரி படங்களில் கருத்து வந்ததா?  இவர்கள் எல்லாம் அம்மா இருக்கும்போதே இப்படி படம் எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சியிருப்போம்.   மக்களுக்கு நல்லது செய்யறது மாதிரியான கேரக்டரில் நடிக்க ஒவ்வொரு நடிகருக்கும் ஆசை இருக்கும்.  அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது வேறு.   முதலமைச்சர் கனவிலும் நடிக்கிறார்கள்.  அப்படி இருக்கும்போது அவர்களின் கொள்கைகளை சொல்லி நடிக்கலாம்.  ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து, சிதைத்து, இது மாதிரியான கீழ்த்தரமான செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.   

 

சட்ட அமைச்சர் சிவி.சண்முகம் கூறியது போல திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லுகின்ற சாதனமாக இருக்க வேண்டும்.  இவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் மாதிரி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.  ஆனால், இவர்கள் தலைகீழ் நின்றாலும் எம்.ஜி.ஆர். மாதிரி வரமுடியாது.   சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்ற காரணத்தினால் திரைப்படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்.

 

இழிவுபடுத்த வேண்டுமென்றே மறைந்த முதல்வர் பற்றி காட்சிகளை வைத்துள்ளனர்.  அம்மாவின் பெயர் கோமளவல்லியா? இல்லையா? என்படு வேறு.  அவரின் பெயர் என்று சொல்லப்படுகின்ற நேரத்திலே,  எத்தனையோ பெயர் இருக்கும்போது அந்த பெயரை வைத்தது காழ்ப்புணர்ச்சியின் காரணம்தான்.  மனதை புண்படுத்துகின்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது’’என்று தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

துணி தைத்து கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24)  வடசென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூர் வியாபாரிகள் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அவர், ஓட்டேரியில் உள்ள தையல் கடையில் துணி தைத்துக் கொடுத்து வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார்.