Advertisment

''அண்ணன் 10 பவுன் செயின் போடுவார்''... வாக்குறுதி கொடுத்த அமைச்சர் - பதறிய எம்.பி.

gold

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கூட்டணியில் உள்ள கட்சிகளை ஆதரித்து முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

Advertisment

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக எம்பி அன்வர்ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''தேர்தல் களத்தில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் கட்சி பொறுப்பாளர்களுக்கு 10 பவுன் தங்க சங்கிலி வழங்கப்படும். அதனை அன்வர் ராஜாவே வழங்குவார்'' என்றார். உடனே அன்வர் ராஜா, யாரு நானா என்பதுபோல் கேட்க, ''நாங்க வாங்கி உங்களிடம் (அன்வர் ராஜா) தருவோம். அதனை நீங்கள் வழங்குங்கள்'' என்று கூறினார்.

Promise minister gifts gold
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe