கரோனா சர்ச்சையில் த.மா.கா.வை அந்தக் கட்சிப் பிரமுகர் ஒருத்தரே சிக்க வைத்துள்ளதாகச் சொல்லப்பட்டது.இது பற்றி விசாரித்த போது,கரோனா பற்றி இந்துத்துவா அமைப்புகள் மத துவேசத்தோடு சர்ச்சை செய்திகளைப் பரப்பி வருகின்றன.அதே பாணியில் த.மா.கா இளைஞரணித் தலைவரான யுவராஜும் தன் ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கரோனா தொற்று பரவக் காரணம்டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் நடத்திய மாநாடுதான் என்று பதிவிட்டுள்ளார்.மேலும், அதில் கலந்துகொண்டவர்கள் மூலம்தான் கரோனா பரவியது என்கிற அர்த்தத்திலும் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

tmc

Advertisment

அது, த.மா.கா.வில் உள்ள முஸ்லிம்களை ஏகத்துக்கும் கொந்தளிக்க வைத்துள்ளது.இது மதவெறிப் பார்வையோடு பதியப்பட்ட பதிவு என்று சம்மந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்குப் புகார்கள் சென்றுள்ளது. பதறிப்போன வாசன், யுவராஜைத் தொடர்பு கொண்டு அவரைக் கடுமையாக வறுத்தெடுத்ததோடு, அந்தப் பதிவையும் நீக்க வைத்துள்ளார் என்கின்றனர்.