பாமக இளைஞரணிதலைவர்பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிதலைவராகப் பொறுப்பு வகித்தவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன். கடந்த அக்டோபர் மாதம் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட இவர்தற்போது தான் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கட்சியின்நிறுவனர் ராமதாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணி தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்”எனக்குறிப்பிட்டுள்ளார்.