Skip to main content

தமாக பொதுச்செயலாளர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட ஜி.கே.வாசன்! (படங்கள்) 

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நாதன் எழுதிய புத்தகத்தின் வெளியிட்டு விழா இன்று (23.10.2021) சென்னையில் நடைபெற்றது. நாதன் எழுதியுள்ள ‘மூன்று முகம்’ எனும் புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார். அதனை தேவநாதன் யாதவ், தனபால், முன்னாள் நீதிபதி சுபாராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், ஏராளமான அக்கட்சித் தொண்டர்களும் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"You are all in the hand symbol..." - G.K. Vasan

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி - விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Next Story

‘ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுக்கே’ - தமாகா தீர்மானம்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

TMK passed a resolution regarding the Erode East constituency

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, ஜனவரி 31 இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

 

தற்போது ஈரோடு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார். மேலும், இன்று காலை அதிமுக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

பேச்சுவார்த்தைக்கு பின் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணியின் வெற்றியினை கருத்தில் கொண்டு செயல்படுவோம் எனக் கூறியிருந்தார். இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா போட்டியிடும் என நம்பப்பட்ட நிலையில், கூட்டணி வெற்றி முக்கியம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியது இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

 

இந்நிலையில், ஈரோடு மாவட்ட தமாகா கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிற்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்பின் தமாகா நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய அவர்கள், “மீண்டும் தமாகாவிற்கு ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம். தமாகாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஜி.கே.வாசன் கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் கலந்து பேசி ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிற்கு ஒதுக்க வேண்டும். அப்படி அறிவிக்கின்ற வேட்பாளர்களின் வெற்றிக்கு தமாகா பணியாற்றும்” எனக் கூறியுள்ளனர்.