Advertisment

“கூட்டணி தர்மத்தினை கடைப்பிடிக்கிறதா அதிமுக?” - ஜி.கே. வாசன் விளக்கம்

GK Vasan comments on AIADMK's stand on Erode East by-elections

Advertisment

அதிமுக கூட்டணி தர்மத்தினை கடைப்பிடிக்கிறதா இல்லையா என்பது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இடைத்தேர்தலில் எங்களது வெற்றி மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு காலக்கெடு கொடுத்துள்ளது. அந்த காலக்கெடுவிற்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். மேலும் எங்களை ஆதரிக்கும் கட்சிகள் அந்த காலக்கெடுவிற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Advertisment

திமுக ஆட்சி மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது. கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத ஆட்சி என்றால் திமுக முதல் வரிசையில் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நம்பி காத்திருந்த மக்கள் இன்று ஏமாந்த நிலையில் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் எதிர்மறை ஓட்டுகள் அதிகரிக்கிறது. அதுவே எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். திமுக கூட்டணி கட்சிக்கு தர்மத்தின் அடிப்படையில் காங்கிரசுக்கு தொகுதியைக் கொடுத்துள்ளது. அதுபோல் அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறதா என்று கேட்கின்றனர்.

எங்களது கூட்டணிஒத்த கருத்து கூட்டணிதர்மத்தின் அடிப்படையிலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வெற்றி வியூகம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe