Advertisment

“உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள்” - அருண் நேரு

Give me a chance to serve you says Arun Nehru

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தனது பிரச்சாரத்தை கள்ளையில் துவைக்கினார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

Advertisment

பொதுமக்கள் மத்தியில் திமுக வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது: ஆர்வத்தோடு வந்து என்னை ஆர்ப்பரித்து வாழ்த்தியதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு சேவையாற்ற இளைஞரான என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். இந்த பகுதியினுடைய மக்கள் குறைகள் அனைத்தையும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக இருந்து மண்ணின் மைந்தனான எனக்கு உங்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பை தாருங்கள். நான் இந்தப் பகுதி மக்களுடைய குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதோடு, இந்தப் பகுதியில் வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொழிற்சாலை துவங்க பாடுபடுவேன். விவசாயிகளுக்கு விவசாயம் செழிக்க தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன்.

Advertisment

தொழிற்சாலைகள் இல்லாததால், மற்ற பகுதிகளுக்கு வேலை தேடிச் செல்லும் நிலையை மாற்றுவேன். கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச பேருந்து திட்டத்தை மகளிர்களுக்காக தந்து கொண்டுள்ளார். அதனால் எண்ணற்றோர் பயனடைந்து வருகின்றனர். அதுபோல கலைஞர் உரிமைத்தொகை மாதந்தோறும் ஆயிரம் பெறுகிறீர்கள். அதுமட்டுமின்றி எண்ணற்ற திட்டங்களை தலைவர் உங்களுக்காக செய்து கொண்டுள்ளார். அவர் செய்த சாதனைகளை பட்டியலிட ஒரு நாள் போதாது. அதனை எண்ணி எனக்கு வருகிற 19-ந் தேதி நாட்டின் தலையெழுத்தை மாற்ற இருக்கிற அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு சேவை செய்வேன். உங்களில் ஒருவனாக இருந்து கடமை ஆற்றுவேன் என்றார்.

அதைத் தொடர்ந்து கூடலூர் பஞ்சாயத்து,பேரூர், குண்ணா கவுண்டம்பட்டி, சின்னையம்பாளையம் முனையம்பட்டி, மாகாளிப்பட்டி, ஆர். உடையாபட்டி, நாகனூர், தோகைமலை பேருந்து நிலையம், தெலுங்குபட்டி,சின்ன ரெட்டிபட்டி,இடையபட்டி, கீழவெளியூர்,கல்லடை, முத்தனம்பட்டி,பில்லூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது, கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா எம்.பி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் முன்னோடிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe