Advertisment

அண்ணா வளர்த்த வளர்ப்புகளில் மற்றும் ஒரு வளர்ப்பை திராவிட இயக்கம் இழந்திருக்கிறது: ஈ.ஆர்.ஈஸ்வரன்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பேரறிஞர் அண்ணா வளர்த்த வளர்ப்புகளில் மற்றுமொரு வளர்ப்பை திராவிட இயக்கம் இழந்திருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு இயக்கத்தின் தலைமைப் பண்புகளுக்கு இலக்கணம் என்றால் பேராசிரியர் அவர்கள் அந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்.

K. Anbazhagan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கலைஞர் அவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக தொடர்ந்து பயணித்தவர். முழுவதுமாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். இயக்கத் தோழர்கள் மீது அவர் காட்டிய அன்பு அளப்பரியது. இப்படிப்பட்ட மாபெரும் தலைவருடைய இழப்பு திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

E.R.Eswaran K. Anbazhagan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe