பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு 23-ம் தேதி நடக்கவிருக்கிறது.பொதுக்குழுவுக்குதடையை ஏற்படுத்த ஓ.பி.எஸ் தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ள சூழலில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இதனால்,பொதுக்குழுவைதள்ளி வைக்க வேண்டும் என ஈ.பி.எஸ்க்குஓ.பி.எஸ் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இதற்கு எந்த பதிலும் எடப்பாடிதெரிவிக்காமல் இருந்துவந்தார்.
இந்த நிலையில்,பொதுக்குழுவுக்குதடை விதிக்க முடியாது என்றும்,உரியபாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ.பி.எஸ்சின்கடிதத்திற்குபதில் அனுப்பியுள்ளார் எடப்பாடி. அதில், "பொதுக்குழுவைதள்ளி வைக்க வேண்டிய அளவுக்கு இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. பொதுக்குழு கண்டிப்பாக நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இதனால்அப்செட்டாகியுள்ளபன்னீர்,பொதுக்குழுவைபுறக்கணிக்கலாமா? என்று தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.