Advertisment

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சிசார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பாஜக சார்பாக சென்னை மாநகராட்சி 129 வார்டில் போட்டியிடும் செந்தில்குமாரை ஆதரித்து அக்கட்சியின் கலை கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் சைக்கிள்பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார்.