Skip to main content

'மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியடிகள்;மதவெறியை மாய்ப்போம்'-ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
'Gandhi feet are living in people's minds. Let's eradicate sectarianism'- Chief Minister condemns Governor


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநரின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், 'காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ரவி கூறியது வன்மம் கலந்த நோக்கம் கொண்டது. தேசத் தந்தை எனப் போற்றப்படும் காந்தியை பொய்கள், அவதூறுகளால் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டுள்ளனர். காந்தியின் கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கியுள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு .இதை உடனே தடுக்க வேண்டும். காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம். இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில் தமிழ்நாட்டுக்கு இந்த கடமை அதிகம் இருக்கிறது. ஒற்றுமையின் அடையாளமாக உள்ள காந்தியின் புகழை சிதைப்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சி செய்கிறார்கள். காந்தி பிறந்தநாளை 'ஸ்வச் பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது இவர்களின் அழித்தல் வேலைகள். 'ஸ்வச் பாரத்' என மாற்றியது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதேபோன்ற காரியத்தை அக்டோபர் இரண்டில் பேரணி நடத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ் திசை திருப்ப பார்த்தது. அதை அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும் மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியடிகள். மதவெறியை மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்; வாழ்க காந்தியின் புகழ்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அரசு உதவிபெறுமம் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித் திட்டம்; மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
 Minister Anbil Mahesh having breakfast with students

தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட அசுர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். 

தமிழக முதல்வர் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் இதனை அடுத்து தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ளபள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர்  காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற  உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியான  ஸ்ரீ முருகன் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். இப்பள்ளியில் 64 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிகழ்வில்  மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் சுமதி உட்பட  மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தாசில்தார் ஜெயபிரகாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் , தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், அசுர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி குமரகுரு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி?

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Armstrong wife to petition the governor

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

அதே சமயம் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க நேரம் கேட்டுள்ளார். இதற்காக பகுஜன் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க ஆளுநர் ரவியிடம் மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.