Future of AIADMK-Delhi relationship; DTV Dhinakaran confirmed

Advertisment

துரோகிகள் துரோகிகள் தான் என்பதை டெல்லியில் இருப்பவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா உறவினர் டாக்டர் சிவக்குமார் இல்லத்திருமணவிழா திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவின் கட்சி. அவரின் தொண்டர்கள் எல்லாம், இது போன்ற சுயநலமான,தவறான, பதவிவெறி கொண்ட பதவிச் சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் உள்ளார்கள். தொண்டர்கள்ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அமமுக தான் என உணரும் காலம் வரும்.

Advertisment

இன்னொரு கட்சியைப் பற்றி பேச வேண்டாம். ஆனால், துரோகிகளைப் பற்றி டெல்லியில் இருப்பவர்கள் வெகுவிரைவில் புரிந்து கொள்வார்கள். துரோகிகள் துரோகிகள் தான் என்பதை அவர்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு சிலரின் பதவி வெறி பணத்திமிர், அகங்காரத்தால் ஜெயலலிதாவின் கட்சி இன்று வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு உள்ளது. காலம் தீயவர்களுக்கு சரியான தீர்ப்பை கொடுக்கும். துரோகம் செய்தவர்களுக்கு வெகுவிரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பளிப்பார்கள்” என்றார்.