Advertisment

“திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது..” - விஜயபிரபாகரன்

publive-image

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று துபாய் புறப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது மகன் விஜயபிரபாகரன், “விஜயகாந்த், உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே சென்றுள்ளார். நல்ல உடல்நலத்துடன் உள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிச்சயமாகப் போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார். அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம். கடந்த ஆட்சியின் போது, அதிமுகவில் இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது தெரியும்.தேமுதிக தொடங்கியதற்கான இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம். இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அனைத்து சாதியினரும்அர்ச்சகர் ஆகலாம்அறிவிப்பை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

vijayaprabakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe