Full satisfaction to the police in the investigation conducted on Sasikala

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.

Advertisment

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை நடைபெற்றது.

Advertisment

இவ்விசாரணை குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், "சசிகலாவிடம் நடத்திய விசாரணையில் காவல்துறையினருக்கு முழு திருப்தி. கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி சசிகலா பதிலளித்தார். கொடநாடு பங்களாவை புதுப்பிக்கவும், அங்கு செல்லவும் சசிகலாவுக்கு தடை இல்லை" எனத் தெரிவித்தார்.