ADVERTISEMENT

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிசுக்கு தடை! மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!

11:50 AM Jul 05, 2020 | rajavel

ADVERTISEMENT

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தோம்.

காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

சர்ச்சைக்குரிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்ததால் தமிழகம் முழுக்க இதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. அதன் எதிரொலியாக இன்று தமிழகம் முழுக்க ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருக்கிறது. இதை வரவேற்கிறோம். இதை நிரந்தர தடையாக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் வழியில் அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இதற்கு ஏற்பளிக்கும் வகையில் தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT