Advertisment

கரோனா நெருக்கடியிலும் ஓட்டத்தை நிறுத்தாத மாரத்தான் வீரர்! 

Advertisment

உடல் ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் சென்னையின் முன்னாள் மேயரும் திமுக எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரமணியன். மாரத்தான் வீரர் என அழைக்கப்படுபவர். இந்தியா மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு பல சாதனைகள் புரிந்தவர். ஓட்டத்திலும் உடற்பயிற்சியிலும் அதீத ஆர்வம் கொண்டுள்ள மா.சுப்பரமணியன், கரோனா கால நெருக்கடியிலும் தனது சாதனை ஓட்டத்தைநிறுத்தவில்லை.

Advertisment

தனது வீட்டு மொட்டை மாடியில், மிகப் பெரிய அளவில் 8 வடிவிலான ஓடுதளம் வரைந்து அதில் 'ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' க்காக நேற்று (18.6.2029) ஓடினார். மிகச் சரியாக 4 மணி நேரம் 8 நிமிடம் 18 நொடிகள் இடைவிடாமல் ஓடி சாதித்திருக்கிறார். 8 வடிவிலான ஓடு தளத்தில் 1,010 முறை சுற்றி தனது ஓட்டத்தை நிறைவு செய்துள்ளார் மா. சுப்பரமணியன். இந்தச் சாதனையை 'ஆசியன் புக் ஆஃப் ரெக்காட்ஸ்' பதிவு செய்துள்ளது.

ma.subramanian running
இதையும் படியுங்கள்
Subscribe