Skip to main content

நான்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 

Published on 22/04/2019 | Edited on 22/04/2019
TTV Dhinakaran



வரும் மே மாதம் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


 

சூலூர் தொகுதியில் கே.சுகுமார், அரவக்குறிச்சி தொகுதியில் பி.எச்.சாகுல் அமீது, திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஆர்.சுந்தரராஜ் ஆகியோர் போட்டியிடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
heat exposure; Samiana pandal at polling centers

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுசேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு வசதி சரியான நிலையில் கதவு, ஜன்னல் மின்சார வசதி, ஃபேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர் மர நிழல், அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.  

இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச் சாவடிகளுக்கு சாமியான பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகு சாமியானா பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.