Advertisment

அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆட்டோ பிரச்சாரம்; தொடங்கி வைத்த முன்னாள் எம்.பி. !

Former MP who started auto campaigns supporting AIADMK candidate

திருச்சி நாடாளுமன்றத்தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிக்க ஆட்டோ பிரச்சார வாகனங்களை முன்னாள் எம்பி குமார் துவக்கி வைத்தார்.

Advertisment

நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு, திருச்சி நாடாளுமன்றத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

அதன் ஒரு பகுதியாக, திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், பெண் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டோர் அடங்கிய, ஆட்டோ பிரச்சார வாகனங்களை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் தேர்தல் பிரச்சார வாகனத்திற்கான அனுமதிச்சீட்டை ஆட்டோ ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஆட்டோவில் அமர்ந்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பெல் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe