former mlas admk eps and ops order

Advertisment

அ.தி.மு.க.வில் இருந்து இரண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கி அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.இளவழகன், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகிய இருவரும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.