former Minister Jayakumar press meet

Advertisment

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சில நாட்களாக கொங்கு நாடு தொடர்பான விவாதத்தைப் பாஜகவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார்கள். இதற்கு மற்ற கட்சியினர் கடும் பதிலடிகளைக் கொடுத்துவருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவினருடைய இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனத்தையும் கருத்துகளையும் தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில்சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கொங்குநாடு சர்ச்சை குறித்தகேள்விக்கு ''அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பின்னர் பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,''காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு'' என்றார்.