kt rajenthra bhalaji

காங்கிரஸ் கட்சியின் முன்னணிப்பேச்சாளரான ‘வாய்ச்சவடால்’ குருசாமிக்கு 78 வயதாகிறது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரான இவர், முதுமையின் காரணமாக உடல்நல பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத அவரது தற்போதைய நிலையை, அவர் வசித்துவரும் சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். உடனே, சித்துராஜபுரம் கிளம்பிய அமைச்சர், குருசாமியை அவரது வீட்டில் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு, அவரது அந்தக் காலத்து அதிரடி மேடைப் பேச்சை சிலாகித்தபடி விவரிக்க, பூரித்துப் போனார் குருசாமி.

Advertisment

விடைபெற்ற போது அவரைக் கையெடுத்துக் கும்பிட்ட ராஜேந்திரபாலாஜி, “அய்யா.. நீங்க தப்பா நினைக்கக்கூடாது.. இதை மருத்துவச் செலவுக்கு வச்சிக்கங்க..” என்று தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சம் தர, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய், பதிலுக்கு வணங்கினார் குருசாமி.

.