Advertisment
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97- ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி, கனிமொழி எம்.பி, துரைமுருகன் உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கலைஞர் நினைவிடத்தில் ஒரு ஜோடிக்கு மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்