Advertisment

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்ததினம் இன்று (15.09.2021) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், இன்று காலை அவரின் திருவுருவப் படத்துக்குத் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.