/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2-2_80.jpg)
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார். பின்பு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவரது அணியில் இருந்தார். பின்னர் பல்வேறு சர்ச்சையின் காரணமாகஎடப்பாடி பழனிசாமி அணியின் பக்கம் வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைத்ரேயனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)