Former AIADMK mayor joins DMK

Advertisment

அ.தி.மு.க முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்றுகாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும் - மாவட்ட முன்னாள் செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாஎம்.பி., கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கோவை கார்த்திக், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.