Advertisment

''சசிகலா சேர்ந்தாலும் கட்சி தேராது'' - அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு!

former admk minister talk about admk situation

அதிமுக என்பதுஉடைந்த பானை என அதிமுக முன்னாள் அமைச்சர்வ.து. நடராஜன்விமர்சித்துள்ளார்.

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவருமான வ.து. நடராஜன், இவரது மகனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தவருமான வ.து.ந. ஆனந்த் ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஒரத்தநாடு சேகர் போன்றஅமமுகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். சுமார் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இன்று இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் ''அதிமுக என்பதுஉடைந்த பானை. சசிகலா இனி சேர்ந்தாலும்கட்சி தேராது. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஒரு கம்பெனி போல் நடத்திவருகிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர்வ.து. நடராஜன் விமர்சித்துள்ளார். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admk ammk former minister sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe