6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல்; வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!

Filing of nominations begins today Rajya Sabha elections 6 seats

தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தது. அதன்படி, காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (02-06-25) தொடங்கியது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூன் 9ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில், தி.மு.க சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் களமிறங்குகின்றனர். அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

nominations Rajya Sabha RAJYA SABHA ELECTION RajyaSabha
இதையும் படியுங்கள்
Subscribe