Advertisment

தோல்வி பயம்!!! தொகுதி மாறும் எடப்பாடி? 

dddd

Advertisment

அ.தி.மு.க அமைச்சர்கள் மத்தியில், தேர்தல் பயம் தொற்றிக்கொண்டுள்ளது. அனைத்து அமைச்சர்களும் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டசட்டமன்றத் தொகுதியிலிருந்து மாறி, வேறு தொகுதியில்போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் வேறு தொகுதிகளில் போட்டியிடத் தயாராவதால், அந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டபோது, நானே இந்த முறை எடப்பாடியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். வன்னியர்கள் மிகுந்துள்ள எடப்பாடி தொகுதியைவிடக் கொங்குவேளாள கவுண்டர்கள் நிறைந்துள்ள கோவை மாவட்ட தொகுதிகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து போட்டியிட உள்ளார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவினர்.

admk Edappadi Palanisamy Election tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe