Advertisment

தந்தை பெரியார் பிறந்தநாள்; திமுக சார்பில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

Father Periyar birthday DMK Social Justice Day Pledge Acceptance

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி நாளை (செப்டம்பர் 17) ஏற்கப்பட உள்ளது.

Advertisment

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் ‘சமூகநீதி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்றும், அவர் பிறந்த நாள் அன்று ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ ஏற்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

Advertisment

இந்த அறிவிப்பிற்கிணங்க தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe