Skip to main content

விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Farmers Struggle - villupuram - District Office of the Communist Party

 

 

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ‘மின்சார திருத்த சட்டம் 2020’ சட்டமாக்கப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் பறிபோகும், குடியிருப்புகளுக்கு நூறு யூனிட் மின்சாரத்திற்கு வழங்கப்பட்ட சலுகை பறிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

 

மேலும் அவர்கள் கூறியதாவது, அத்தியவசிய பொருட்கள் அவசரச் சட்டம் 2020 நடைமுறைப்படுத்தப்பட்டால், 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நீர்த்துபோகும் நிலை ஏற்படும். இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பதுக்கி வைத்தால், பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதனை அவசர சட்ட திருத்தம் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. அப்படி மாற்றி அமைக்கப்பட்டால் உணவுப்பொருட்களில் அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துகள், மற்றும் சமையல் எண்ணெய், தானியங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவை பதுக்கினால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க இயலாது. எனவே செயற்கையான விலை உயர்வுக்கு வழிவகுக்கும். மேலும் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர திட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 சட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளன.

 

எனவே மேற்கண்ட சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுதும்  ஒரு  கோடி மக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 27ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ஐ.சகாப்புதீன், துணை தலைவர் என்.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி வட்ட செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, விழுப்புரம் தொகுதி செயலாளர் பெரியார், விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் காணை இராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.