ffff

Advertisment

டிசம்பர் 8 விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வேளாண் சட்டங்கள் திரும்பபெற வலியுறுத்தி கடந்த 8 தினங்களாக லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு தரப்பில் பேச்சுவார்த்தை என்று பெயரளவிற்கு சொல்லி வருகிறதே தவிர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களை திரும்பெற மறுத்து வருகிறது.

Advertisment

விவசாயிகள் பிரச்சனையில் மோடி தலைமையிலான பாஜக அரசின் பிடிவாதமான அணுகுமுறைக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் விவசாய அமைப்புகள் டிசம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சிஐடியு முழு ஆதரவை தெரிவித்துகொள்கிறது.

Advertisment

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் சிஐடியுவின் அனைத்து சங்கங்களும் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.