Advertisment

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி

ttttt

Advertisment

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கடந்த 60 தினங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் லட்சகணக்கான டிராக்ட்டா்களை கொண்டு மாபெரும் அணி வகுப்பு நடத்தவுள்ளதாகவிவசாயிகள்அறிவித்தனர்.

அணிவகுப்புக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக டிராக்டா் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெறுவதாக அறிவித்தது. அதன்படிஇன்று திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகா், திருவரம்பூா், அந்தநல்லூா், மணிகன்டம் ஒன்றிய விவசாய சங்கங்கள் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய "தொழிற் சங்கங்கள் சார்பாக நடைபெற்றது.

போலீசார் டிராக்டர் கொண்டுவர அனுமதி மறுக்கவே இருசக்கர வாகனத்தில் குவிந்தனர்.இதில் திருச்சி மாநகரில் நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகில் இருந்து500க்கு மேற்பட்டோர்தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜோசப் வில்சன், சிஐடியு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ், ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகி வெங்கடநாராயணன், ஹிந்து மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகி ஜான்சன், ஏஐசிசிடியூ நிர்வாகி மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளை சிவசூரியன் ஆகியோர் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டனர்.

Advertisment

ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து பேரணி செல்ல அனுமதி வழங்கும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.போலீசார் அனுமதி மறுக்கவே போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களை மீறி பேரணி புறப்பட்டு சென்றதுமாநகராட்சி அலுவலகம், ஒத்தகடை, தலைமை தபால் நிலையம், வழியாக ரயில்வே ஜங்ஷன் அருகில் முடிவடைந்தது.பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Delhi Farmers Protest trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe