சிதம்பரம் பகுதியில் நெல் மற்றும் மணிலா பயிர்களில் ஆனைக்கொம்பன் மற்றும் புகையான் நோய் தாக்கியுள்ள இடங்களை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பிஆர் பாண்டியன் மற்றும் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட சங்கத்தினர் சம்பந்தப்பட்ட வயல்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

p r pandian

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர் பாண்டியன், தமிழகத்தில் மார்கழி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் மானாவாரி பயிரான மணிலா மகசூல் கடலூர் மாவட்டம் கிள்ளை, சிதம்பரம் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடு அரசு வழங்க வேண்டும்.

Advertisment

அதேபோல் நெல் சாகுபடி செய்துள்ள இடங்களில் ஆனைக் கொம்பன், புகையான் நோய்கள் தாக்கி மகசூல் பாதிப்பை சந்தித்து வருகிறது. தனியார் உரக் கடைகளில் விவசாயிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்காமல் லாப நோக்கத்தில் மருந்துகளை வழங்குகிறார்கள். இதனால் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழக அரசு இதுபோன்ற பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வுசெய்து அதற்கான மருந்துகளை தனியார் உரைகள் வழங்குவது குறித்து உறுதி செய்ய வேண்டும். தவறாக வழங்கும் கடைகளை தடைசெய்யவேண்டும்.

2020ஆம் ஆண்டு சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ2500, கரும்புக்கு 3000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.