Advertisment

வேளாண் மசோதா... வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் (படங்கள்)

Advertisment

எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தலைமையில் கடந்த 21.09.2020 தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் தொடர்பான, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் - மசோதாக்களை ஆதரித்த அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 28.09.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கின்றன. அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மேலும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியும் முழக்கங்களை எழுப்பினர்.

Chennai valluvar kottam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe