சசிகலாவை பற்றி கணித்த ஜோதிடர்! அமமுக கட்சியினர் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி. இவர் கடந்த வருடம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட போது, இந்த வருடம் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் போகும் என்று கூறினார். அவர் கூறியது போல் அவர் சொன்ன அணிகளே அரையிறுதிக்கும், இறுதி போட்டிக்கும் சென்றது. அதே போல் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் சமீபத்தில் அவர் கூறிய கணிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ammk

இந்த நிலையில் மீண்டும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது, சசிகலா விரைவில் விடுதலையாகி வருவார் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற கட்சியை இணைப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் கட்சியை இணைக்கும் போது ஒரு சில நபரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

admk ammk politics sasikala
இதையும் படியுங்கள்
Subscribe