Advertisment

தினகரன் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் தினகரன் கட்சியில் யார் வெளியேறுவார்கள் என்ற நிலைமைக்கு போனது. சமீபத்தில் நடிகர் ரஞ்சித் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் என்று வதந்தி பரவியது.

Advertisment

ammk

பின்னர் நடிகர் ரஞ்சித் நான் கட்சி மாறவில்லை வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறினார். இந்த நிலையில் நடிகை வினோதினி தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தார். அப்போது நடிகர் ரஞ்சித்தும் உடனிருந்தார். நடிகை வினோதினி விசு இயக்கத்தில் மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ். மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

politics Actress actor ammk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe