Skip to main content

வாக்களிக்கும் முறைப் பற்றி சத்யபிரதா சாஹூ விளக்கம் (படங்கள்)

Published on 17/04/2019 | Edited on 17/04/2019



 

2019 பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று சென்னையில் வாக்களிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுகவின் முக்கிய புள்ளியை சந்தித்த அமைச்சரின் கையாள்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒரு ஓட்டலில் போலீசார் கைப்பற்றிய கூத்தெல்லாம் நடந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்று அறிவிப்பு வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், "தமிழகத்தில் தேர்தல் வழக்கமான நடைமுறைகளை மீறி நடைபெறுகிறது. எப்பொழுதும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் வாக்குகளை எண்ணுவார்கள். அதற்கொரு முக்கிய காரணம் உண்டு. நடந்த வாக்குப்பதிவில் குறைகளோ, முறைகேடோ ஏதேனும் இருந்தால், உடனடியாக தேர்தல் நடந்த மறுநாள் அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவார்கள்.. மறு தேர்தல் நடத்தப்பட்ட வாக்குகளையும் சேர்த்து மூன்றா வது நாள் எண்ணுவார்கள். 

 

sathyapradha saha



இந்தியாவில் கடைசிக்கட்டமாக மே 19 அன்று நடக்கும் வாக்குப்பதிவில் குறைகள் ஏதேனும் இருந்தால் அன்றைய தினம் மாலையே தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குத் தெரியவரும். உட னே மறுவாக்குப் பதிவு நடத்தி அந்த முடிவுகளையும் சேர்த்து மே 23 அன்று ஒட்டுமொத்த முடிவாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் எத்தனை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரம் ஆகியவை சரியாக பயன்படுத்தப்பட்டன என ஒரு ரிப்போர்ட் ஏப்ரல் 19-ஆம்தேதி காலையில் தமிழக தேர்தல் ஆணையரான சத்யபிரதா சாஹுவுக்கு வந்துவிடும். ஆனால், தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என தேனி மக்களவை தொகுதிக்கான 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் ரகசியமாக கோவையிலிருந்து கொண்டுவரப் பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பிய பிறகு தமிழக தேர்தல் கமிஷனர் வாய் திறந்தார்.

 

velumani



ஏன் இந்த தாமதம் என கேட்டதற்கு, "நாங்கள் டெல்லிக்கு தகவலை தந்துவிட்டோம். டெல்லியின் அனுமதிக்காக  காத்திருந்தோம்' என்கிறார் தமிழக தேர்தல் கமிஷனர். இது தவறு, 46 வாக்குச்சாவடிகளில் குளறுபடி என்றால் 46-க்கும் மறு தேர்தல் என டெல்லி தேர்தல் கமிஷன் சொல்லும். வெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த டெல்லி தேர்தல் கமிஷன் உத்தரவிடாது'' என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள். 
 

udhayanidhi



"சத்யபிரதா சாஹு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதிபோல செயல்படுகிறார். அரசியல்வாதிகளை எப்படி சமாளிப்பது என்பதும் அவருக்குத் தெரியும். குடிநீர் வாரிய அதிகாரியாக அவர் ஆடிய ஆட்டம் எல்லாருக்கும் தெரியும். 50 ஆயிரம் இல்லாமல் ஒரு சின்ன பேப்பர் கூட நகராது. துறை அமைச்சரை குளிர்வித்து விடுவார். அவர் ஒருபக்கம் அமைச்சர் வேலுமணியின் கையாளாக இருந்து கொண்டே தி.மு.க. தலைவரான ஸ்டாலினின் மகனான உதயநிதியை ஒரு ஸ்டார் ஓட்டலில் ஒரு டி.வி.யின் சினிமா ரிப்போர்ட்டர் மூலம் அடிக்கடி சந்தித்துப் பேசினார்'' என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். "தி.மு.க. தரப்பிலிருந்து சத்ய பிரதா சாஹுவை  நேரடியாக குற்றம் சாட்டுவதில்லை. அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி, கடுமையான போட்டிக்கிடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓட்டு மெஷின் மூலம் ஒரு ஆபரேஷனை சாஹு நடத்த திட்டமிட்டார். இதேபோலத் தான் 2016-ல் ஜெ. ஆட்சியில் நடத்தப்பட்டது. அதனால்தான் 1.1% வித்தியாசத்தில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றது'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். தற்போது சாஹு கடைப்பிடிக்கும் இந்த மறு வாக்குப்பதிவு ரகசியம்  இணை ஆணையரான பாலாஜிக்குக்கூட தெரியாதாம். 

- சக்தி, ஜீவாதங்கவேல்.
 

Next Story

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (படங்கள்)

Published on 17/04/2019 | Edited on 17/04/2019




 

2019 பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 2ம் கட்டமாக 39 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தேர்தல் ஆணையம் இன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக பாலித்தீன் பேப்பர்களையும் வழங்கியுள்ளது. கூடாரம் வேய்ந்த சரக்கு வாகனங்கள் அல்லது சிறிய கன்டெய்னர் ரக வாகனங்களி வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேக் செய்து சீல் வைத்தப் பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்குகொண்டு செல்லப்படும். வெயில் மழையால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாலித்தீன் சாக்குகளில் பேக்கிங் செய்யப்பட்டுள்ளன.