தேர்தல் முடிவுக்கு பின்பு நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் நிறைய விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்துள்ளது. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

Advertisment

modi

இதில் பெரும்பாலும் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த ஒரு சில மணிநேரத்தில் டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பல கேள்விகளையும்,விமர்சனங்களையும் உண்டாகியுள்ளது.

Advertisment

கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறப்பட்டது. மேலும் காங்கிரஸ் அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியும் இருந்தது. அப்போதே பாஜக மொத்தமாக 269 இடங்களை மட்டுமேக் கைப்பற்றியது. ஆனால் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மோடி மீதும் பாஜக மீதும் கடந்த முறைக் காங்கிரஸ் அரசின் மீது இருந்த அதிருப்தியை விட அதிக அளவில் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் எப்படி பாஜக 306 இடங்களைக் கைப்பற்ற முடியும் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 306 இடங்கள் கிடைக்கும் என்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த கருத்துக்கணிப்பில் மாற்றம் நிகழும் என்று கூறிவருகின்றனர்.