Skip to main content

EXCLUSIVE: "இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழா... எதிர்க்கும் முக்குலத்தோர்..!! சாதி அரசியல் செய்கிறாரா தினகரன்?"

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
T


   இப்போது இல்லாவிட்டாலும் நாடாளுமன்ற தேர்தலோடு கண்டிப்பாக 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதை மனதில் வைத்து இப்போதே கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கிவிட்டார் டி.டி.வி. தினகரன்.


  அண்மையில் பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் ஆலோசனை நடத்திய அவர், " தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அனுசரிப்போம்." என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது இந்த பேச்சு முக்குலத்தோர் சமூக மக்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கர்ணன், அ.ம.மு.க. நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ் செல்வனிடம் தொலைபேசியில் பேசும் ஆடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், " தேவர் சமூகத்திற்கு எதிராகவே தினகரனின் செயல்பாடுகள் இருப்பதாக கூறுகிறார். 

 

T

 

  கர்ணனின் பேச்சு இதோ, " முத்துராமலிங்க தேவரின் வரலாறு குறித்த பாடம் பள்ளிப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது. அப்போது கண்டனம் தெரிவிக்கவில்லை. தூத்துக்குடி அருகே பக்கப்பட்டியில் இரட்டைக் கொலை நடந்தது. அப்போதும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதே சின்னம்மா, நடராஜன் அய்யா இருந்திருந்தால் இப்படி நடக்குமா? இவர் மட்டும் ஏன் இப்படி பண்ணுகிறார். அவங்க ஜாதி (தேவேந்திர குல வேளாளர்) ஓட்டு மட்டும் கிடைத்தால் இவரு ஜெயித்துவிட முடியுமா? எங்க ஓட்டு வேண்டாமா?  எந்த அரசியல் தலைவரும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வது கிடையாது. ஆனால், இவரு போறாரு ஏதோ அரசியலுக்கு போறார்னு ஏத்துக் கிட்டோம். இப்போ அரசு விழா எடுப்போம்னு ஏன் வாக்குறுதி கொடுக்கிறார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த அனிதா வீட்டிற்கு போய் ஆறுதல் சொன்னார் ஏன் மூக்கையாத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செய்யவரவில்லை.." என இப்படியாக நீள்கிறது கர்ணனின் பேச்சு.

 

  இதற்கு பதில் பேசும் தங்க தமிழ் செல்வனோ, " இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழா நடத்துவோம்னு இவரு (தினகரன்) அனவுன்சு பண்ணியிருக்க கூடாது, ஆட்சிக்கு வந்தால் பார்ப்போமுன்னு சொல்லி இருக்கனும்'' என்கிறார்.

 

   இடைத்தேர்தல் நடக்க உள்ள 18 தொகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் தேவேந்திர குல சமூகத்தினர் என்கின்றது முந்தைய வரலாறு. இதை மனதில் வைத்தே தினகரன், இம்மானுவேல் சேகரனுக்கு விழா என்று அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். இது எதிர் தரப்பினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்பது தான் உண்மையே.!!

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்ல வாசி.. அப்புறம்தான் சாப்பாடு; சங்கடத்தை வென்று சாதனை படைத்த 'நாதஸ்வர வித்வான்' பார்த்திபன்!

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

SINGER PAARTHEEBAN Interview 

 

தனியார் தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சியின் மூலம் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்த நாதஸ்வர வித்வான் பார்த்திபன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல். அவர் கடந்து வந்த பாதை குறித்து பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

என்னுடைய குடும்பம் ஒரு நாதஸ்வரக் குடும்பம். அப்பா, தாத்தா இருவரும் நாதஸ்வர வித்வான்கள். எனக்குப் படிப்பு வரவில்லை. அப்பாவிடம் நாதஸ்வரம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு மாமாவிடம் கற்றுக்கொண்டேன். கடலூர் அரசு இசைப்பள்ளியிலும் நாதஸ்வரம் கற்றுக்கொண்டேன். சிறுவயதிலிருந்து பாட்டு பாடுவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. எஸ்பிபி ஐயாவுடைய பாடல்கள் பலவற்றை கேட்டு நாதஸ்வரத்தில் வாசிப்பேன். அதன் பிறகு தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். 

 

நம்முடைய பாரம்பரிய இசை வாத்தியங்கள் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன. சூப்பர் சிங்கர் போன்ற மேடைகள் எங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்குவிக்கின்றன. எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சிறுவயதில் கிராமத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு அப்பாவுடன் வாசிக்க நான் சென்றுள்ளேன். அப்போது சம்பளம் மிகக் குறைவு தான். வருடத்துக்கு ஆறு மாதங்கள் தான் வேலை இருக்கும். மீதி ஆறு மாதங்களுக்கு அந்தப் பணத்தை வைத்து தான் செலவு செய்ய வேண்டும்.

 

பல கலைஞர்கள் இன்னும் வறுமையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் கலையை எப்போதும் விட்டு விடக்கூடாது என்று என் தந்தை என்னிடம் கூறினார். ஒரு சில நிகழ்ச்சிகள் முடிவதற்கு நேரம் ஆகிவிடும். அப்போது நாங்கள் நேரத்திற்கு சாப்பிட முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு உடனே சாப்பிட்டாலும் ஏன் என்று கேட்பவர்களும் உண்டு. அப்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எனக்கு சிறப்பான ஒரு அனுபவம். ஷிவாங்கி எல்லாம் எங்களுடைய செட் தான். அனைவரும் இன்னும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம். 

 

நான் பங்கேற்ற சூப்பர் சிங்கர் சீசனுக்குப் பிறகு தான் கொரோனா வந்தது. எங்களுடைய சீசன் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியால் என்னுடைய கிராமத்தில் எனக்கு நிறைய புகழ் கிடைத்தது. நான் வாசிக்கும்போது என் அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் நினைவுக்கு வரும். நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே பாடுவது மிகவும் கடினம் என்று கூறி அனிருத் என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் நம்மை ஆத்மார்த்தமாக ரசிக்கின்றனர். 

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்பிபி அவர்களின் பாடலை அவர் முன்னிலையில் பாடி பாராட்டுப் பெற்றது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்னரே அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றோம். அப்போதே அவர் என்னைப் பாராட்டினார். மேடையில் அவர் பாட நான் வாசித்தது ஒரு வாழ்நாள் தருணம். எங்களைப் போன்ற இசைக்கலைஞர்கள் இன்று திருப்தியாக இருக்கிறோம். மக்களுடைய ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. இது மென்மேலும் வளர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

 

Next Story

என் மீது பாஜக சாயம் பூச முயற்சி: ரஜினிகாந்த்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் . அவர் கூறியதாவது ,

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. ஞானிகள், சித்தர்கள் மதத்திற்கு அப்பார் பட்டவர்கள். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் நாத்திகர் இல்லை அவர் ஆத்திகர்.அதை மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. பாஜக அவர்களோட முகநூல் கணக்கில் காவி உடை அணிவது போல் பதிவிட்டார்கள். அது அவர்களோட தனிப்பட்ட உரிமை. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் இதை சர்ச்சை ஆகியிருக்க வேண்டாம்.

லதா ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் சந்திக்க போறார்கள். அதை பற்றி?

குழந்தைகளுக்காக, மக்களுக்காகவும் ஒரு நிறுவனத்தை ஆரமிக்க இருக்கிறார்கள். அதை பற்றி பேச தான் அவர்கள் அங்கு சென்றுள்ளார்.


 

BJP PARTY ACTOR RAJINI KANTH SPEECH



உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா?

நாங்கள் போட்டியிட மாட்டோம்.

 

பொன். ராதாகிருஷ்ணன் நீங்கள் பாஜகவில் இனைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை பற்றி விவாதிக்க பட்டதா?

அவர் எந்தவிதமான அழைப்பு விடவில்லை. பாஜக சாயம் என் மேல் பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் போல என் மீதும் அந்த முயற்சி நடந்து வருகிறது. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்.