Skip to main content

“ஆட்சி எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இது” - முதல்வர் ஸ்டாலின் 

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

“This is an example of how governance should not be done” CM Stalin

 

கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். 

 

இது குறித்து கூறிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊடகங்களைப் பார்த்துதான் இதை தெரிந்து கொண்டேன் எனக் கூறினார். இது பல்வேறு தரப்பினரிடையே பல கண்டணங்களை பெற்றது. இதன் பின் இது குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் விசாரித்து அறிக்கையை தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தனர். 

 

சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “ஆட்சி நிர்வாகம் எப்படி  நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பதை மறந்து விடக்கூடாது. நிர்வாகத்தை நடத்துபவராக இருந்தாலும் கூட மனிதாபிமானம் கொண்டு மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டும். யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் கூண்டிலே நிறுத்தப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள்”. எனக் கூறினார். 

 

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் நிவாரண தொகை முதல்வர் ஸ்டாலினால் சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்