Advertisment

திமுகவிற்கு படையெடுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் 

dmdk

கோவை கவுண்டம்பாளையம் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.

Advertisment

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பலகோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து, புதியதாக தொடங்க இருக்கும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து 55000 பேர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Advertisment

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அழைப்பின் பேரில் இந்த இணைப்பு நடந்தது. பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக கட்சியின் கொங்கு மண்டல முக்கிய பிரமுகருமான ஆறுகுட்டி நேற்று திமுகவில் இணைந்தார். இவர் 2011 மற்றும் 2016ல் அதிமுகவின் சார்பில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். மேலும் தேமுதிக கட்சியின் கோவை மாவட்ட செயலாளரும் முன்னாள் சூலூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன தினகரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி போன்றோர் நேற்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

kovai dmdk admk
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe