Ex-minister's house raided

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரர் உள்பட அவரது சகாக்கள் நடத்தும் நிறுவனங்கள் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அறப்போர் இயக்கம் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இன்று (10.08.2021) சென்னை உள்பட பல இடங்களில் எஸ்.பி. வேலுமணிக்கு சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனைகளும் விசாரணைகளும் நடந்துவருவதால் வேலுமணி வீடு முன்பும், சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பும் அதிமுகவினர் குவிந்துவருகின்றனர்.

Advertisment

இந்தத் தகவல்கள் வேகமாக பரவிவரும் நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் வேலுமணியின் பினாமிகளாக செயல்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்.இ.டி. விளக்கு பொருத்தியது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்துச் செயல்பட்டவர்கள் திக் திக் மனநிலையில் உள்ளனர். புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் சாதாரண நிலையில் இருந்தவர்கள், வேலுமணியால் தற்போது கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து நகரில் கட்டடங்களை வாங்கிவைத்திருப்பவர்களும், இன்னும் அரசு வேலையில் இருக்கும் பினாமிகளும் நம்ம வீடுகளுக்கும் ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் ஆவணங்களை இடம் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Advertisment

இவர்களது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களைப் போலீசார் கண்காணிப்பதுடன் மீடியாக்களின் பார்வையும் அங்கேயே உள்ளது.