சென்னைவானகரத்தில்உள்ள ஸ்ரீவாருவெங்கடாசலபதிதிருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப்பொதுக்குழுகூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுகபொதுக்குழுகூட்டம் நடந்து வருகிறது.
இதில் முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர், “தொண்டர்களால் நடத்தப்படுகின்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்தாலும், நிரந்தரப் பொதுச்செயலாளராக, ஒருசாமானியனாக, எம்.ஜி.ஆரின்புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையோடு, அனைவரையும்அரவணைத்துசெல்லும் பொறுப்பேற்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும். அதற்கு வலிமைமிகு தலைமை எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கின்ற ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி.
இந்தப் பொதுக்குழுவை நடத்தக்கூடாது, எப்படியாவது நிறுத்தவேண்டும். இந்தக் கட்சிஆட்சிக்கு வந்துவிடக்கூடாதுஎன ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவில் வளர்ந்தவர்கள், அதிமுக அழிந்துவிடும் என்றுகாட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அழிகின்ற காலம் விரைவில் இருக்கிறது என்பதை நாம்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இங்குபொதுக்குழு நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் (ஓ.பி.எஸ்.,வைத்திலிங்கம்) இங்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.கருத்துசொல்லவேண்டும் என்றால் இங்கு வந்துசொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, கோடாரியைஎடுத்து சென்றதலைமை அலுவலகத்தை இடித்து உள்ளே செல்கின்றனர். அவர் உண்மையான அதிமுக தொண்டனா? எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக இருந்ததால் எடப்பாடி இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். ஆனால், நாம் அந்தபொறுப்புக்கு வரவில்லைஎன்றால், இந்த இயக்கமே அழிந்துவிட வேண்டும் என்பதற்காக இன்று அவர்கள் திமுகவின் துணையோடு நடத்தும் நாடகத்தையும் தாங்கிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.
கொடநாடு வழக்கு எடப்பாடியேஅதனைகண்டுபிடித்து முடியும்தருவாயில்; ஆட்சி மாற்றத்தின் காரணமாக; இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் எனும் காரணத்திற்காக அவர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்துகிறார்கள். மேலும், இங்கு இருக்கின்ற நம்அதிமுகவிற்குதுரோகம் செய்தவர்களும் அதனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், இவர்களெல்லாம் அதிமுகவின் தொண்டர்களா?
அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் வாயிலாக நான் ஒரு கோரிக்கை வைக்கின்றேன், இவ்வளவு துரோகம் செய்தவர், காட்டிக்கொடுப்பவர்கள் இந்தக்கட்சிக்குதேவையா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இது வெறும் ஆரம்பம் தான். எடப்பாடியின்எக்ஸ்பிரஸ்துவங்கிவிட்டது. அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வென்று,செங்கோட்டையைஅடையும். அதேபோல், அவர் தலைமையில் 2026ல் ஜார்ஜ் கோட்டையை அடையும். இங்கு வந்தவர்களுக்கு மட்டுமே இனி இந்தஎக்ஸ்பிரஸில்இடம்; மற்றவர்களுக்கு இடமில்லை” என்று பேசினார்.