Ex-minister Natham Viswanathan's sensational speech at ADMK condemn meeting

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு நகர அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் பீர்முகம்மது வரவேற்றார்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், “தமிழகத்தில் பால் விலை உட்பட அனைத்து விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டது. மின்சாரத்தைத்தொட்டால் தான் ஷாக்கடிக்கும்; இப்போது மின்வாரிய பில்லை பார்த்தாலே ஷாக்கடிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்தில் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து விட்டார்கள். இப்போது தேர்தல் வைத்தாலும் அதிமுக 234 தொகுதியிலும் வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று பேசினார்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் விலை வாசி உயர்வைக் கண்டித்தும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், மோகன் மற்றும் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சதீஷ்குமார், சிறுபான்மை அணி நாகூர் கனி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்மதி மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், குமரேசன் மற்றும் அதிமுகதொண்டர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.