சொத்துக் குவிப்பில் சிக்கிய மாஜி அமைச்சர்; உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

Ex-minister involved in wealth accumulation; The Supreme Court is the main directive

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

கடந்த சில மாதங்கள் முன், மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ராமன் அமர்வு, எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல் மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அரசியல்வாதி என்பதால் தன்னை குறிவைக்கிறார்கள் என்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுவது 3 லட்சத்திற்கு அதிகமாக இல்லை என்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்போ, எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது அனைத்து ஒப்பந்தங்களையும் சொந்த அண்ணனுக்கே வழங்கினார் என்று குற்றம் சாட்டியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe