Advertisment

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு.... பொதுமக்கள் காத்திருப்பு...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

evm machines fault in tamiladu

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மற்றும் வீரப்பன்சத்திரம் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் தேர்தல் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருகின்றனர். மேலும் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவில் தாமதம் நிலவுகிறது.

Advertisment

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள செரியலூர் இனாம் வாக்குச்சாவடியில் இயந்திங்கள் இயங்கவில்லை நீண்ட நேரமாக வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்.பழுது நீக்கும் பணி தீவிரம்.

Evm loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe