இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் விருப்ப மனு 

EVKS Ilangovan son sanjay contest erode east by-elections

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிசார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகனும், மறைந்த திருமகன் ஈவேராவின் சகோதரருமான சஞ்சய் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது குறித்து இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை நடைபெற்றது. அதில்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டியிட விருப்ப மனுகொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறேன். ஆனால் யார் வேட்பாளர் என்று தலைமைதான் அறிவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

byelection congress
இதையும் படியுங்கள்
Subscribe