/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_74.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கமலை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து வருகிறார். முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கமலை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கமலை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)