Advertisment

ஓபிஎஸ் மகனை எதிர்த்து ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி...!

தேனி பாராளுமன்ற தொகுதியில் தற்போது வி‌.ஐ.பி.தொகுதியாக மாறிவிட்டது. தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத் குமார் போட்டி போடுகிறார். அதுபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி.யின் தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ்செல்வன் களமிறங்கியிருக்கிறார்.

Advertisment

ravindranath

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் தேனி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியும்கூட வேட்பாளர் போடுவதில் காலதாமதம் இருந்து வந்தது. அதோடு மீண்டும் இத்தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆரூண் மீண்டும் களம் இறங்குவார் என்ற பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. ஆனால், முன்னாள் எம்பி ஆரூணுக்கு உடல் நலம் சரியில்லாததால் தொகுதியில் தேர்தல் பணி பார்க்க முடியாது என்பதாலும் காங்கிரஸிலேயே வேறு ஒரு வேட்பாளரை போட தலைமையில் பேச்சு நடைபெற்று வந்தது. அப்படி இருந்தும் கூட எனக்கு சீட் வேண்டாம் எனது மகன் அசன் ஆரூணுக்கு கொடுங்க என்று காங்கிரஸ் தலைமை வரை அரூண் பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், தலைமையோ காங்கிரசில் முக்கிய விஐபிகள் இருக்கும் போது தற்போது இளைஞருக்கு எப்படி சீட் கொடுக்க முடியும் என்ற ஒரு பேச்சு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

Advertisment

இந்த நிலையில்தான் இத்தொகுதியில் குஷ்பு போட்டி போடப் போவதாகவும் நேற்று வரை ஒரு பேச்சு இருந்து வந்தது. அதன் அடிப்படையில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில்கூட குஷ்பூ பெயரில் தேர்தல் விண்ணப்ப படிவங்களையும் வாங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் சார்பாக இத்தொகுதியில் தலைமை போட்டி போட அறிவித்திருக்கிறது. அதேசமயம் அதிமுக, டிடிவி அணியினர் ஈவிகேஎஸ் இளங்கோவனை களத்தில் இறக்கி இருப்பதை கண்டு உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதிமுகவினரோ காங்கிரசுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என்று கூறிவருகிறார்கள்.

‌.

admk congress ops ravindranath
இதையும் படியுங்கள்
Subscribe